தமிழ் சினிமாவில் 70, 80 களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை சுஜாதா. இவர் அந்தக் காலத்தில் முன்னணி நடிகர்களான சிவாஜி, கமல் போன்ற நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இவர் முதலில் 1971 ஆம் ஆண்டு தபஸ்வினி என்ற மலையாள திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்த நடிகை சுஜாதா.
எர்ணாகுளம் குளம் ஜங்சன் என்ற படத்தில் நடித்து கொண்டிருக்கும் போது இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் கண்ணில் இவர் காண அவள் ஒரு தொடர்கதை என்ற திரைப்படத்தில் நடிகையாக இவரை நடிக்க வைத்தார். இவர் தான் முதல் படத்திலேயே தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடத்தை பிடித்து விட்டார்.
நடிகை சுஜாதா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்துள்ளார். மேலும் இவர் கமலஹாசன், சிவாஜிகணேசன், முத்துராமன், சிவகுமார் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார். தெலுங்கில் என்.டி.ஆர், கிருஷ்ணா, அக்கினேனி நாகேஸ்வர ராவ், சோபன் பாபு, சிரஞ்சீவி போன்ற நடிகர்களுடனும் நடித்துள்ளார்.
இவர் சினிமாவில் நடித்து கொண்டிருந்த போது ஜெயகர் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அதன் பின் இவரை தயாரிப்பாளர், இயக்குனர் என எவராலும் நெருங்க முடியவில்லை. அதன் பின் 90 களில் ரீ எண்ட்ரியான சுஜாதா அம்மா கற்தபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
மேலும் இவர் தமிழ் சினிமாவில் கடைசியாக கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய வரலாறு படத்தில் நடிகர் அஜித்திற்கு அம்மாவாக நடித்துள்ளார். அதன் பின் உடல் நலக்குறைவு காரணமாக 2011 ஆம் ஆண்டு இருதய நோயால் ம ரண மடை ந்து ள்ளார். அதுமட்டுமின்றி நடிகை சுஜாதா இறக்கும் போது தமிழகத்தில் M L A தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்திருந்த நிலையில் நடிகை சுஜாதாவின் திரைப்பயணம் அதிகம் பேசாமலே அட ங்கி போனது…