சன் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று வானத்தைப்போல. அதில் நெகடிவ் கேரக்டர் ராஜபாண்டி ரோலில் நடித்து வருபவர் அஸ்வின் கார்த்திக். ஹீரோவின் தங்கை துளசியின் கணவர் ரோலில் நடித்து வரும் ராஜபாண்டியின் கதாபாத்திரம் அதிகம் வி ல்ல த்தன மாக காட்டப்பட்டு வருகிறது.
துளசியுடன் உறவை வெ ட்டி விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய திட்டம் போடும் வகையில் கதை சென்று கொண்டிருக்கிறது. அஸ்வின் கார்த்திக் நடிப்பை பார்த்து அவரை திட்டாதவர்களே இருக்க முடியாது. அந்த அளவுக்கு தான் ராஜபாண்டி கதாபாத்திரம் மாறி இருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்பு நடிகர் அஸ்வின் கார்த்திக் அவரது காதலி காயத்ரி என்பவரை நிச்சயதார்த்தம் செய்தார். அவர் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஆக பணியாற்றி வருகிறார். மேலும் இந்நிலையில் இன்று அஸ்வின் கார்த்திக் மற்றும் காயத்ரி ஆகியோரது திருமணம் நடந்து முடிந்துள்ளது.
இந்த ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திருமண ஜோடியின் புகைப்படம் இதோ…