வளர்ப்பு நாயை நம்பி குழந்தையை விட்டுச் சென்ற பெண்ணுக்கு கா த்தி ருந்த பே ரதி ர்ச் சியை பாருங்க….!!

Tamil News

ஒரு நாய் அதை வளர்க்கும் பெண்ணுக்கு மிகவும் விசுவாசமாக இருக்கிறது, அவள் தன் குழந்தையை அதனுடன் விட்டு விட்டு பல வேளைகளில் வெளியில் செல்கிறாள். நாயுடன் உறங்கும் குழந்தையை அவள் எப்போதும் கண்டு கொள்வதில்லை. அவளும் நாயை நம்பினால் ஆனால் ஒரு நாள் மிகவும் சோகமான சம்பவம் ஒன்று நடந்தது.

வழக்கம் போல் அந்த பெண் இந்த விசுவாசமான நாயை வீட்டில் குழந்தையுடன் விட்டு விட்டு கடைக்கு சென்றார். அவள் திரும்பி வந்த போது ​​ ஒரு பயமுறுத்தும் காட்சியைக் கண்டாள் அது அவளுக்கு குழப்பமாக இருந்தது. குழந்தை தன் தொட்டிலில் இல்லை அதன் சூப்பி போத்தல் அதை உடைந்து அதை சுற்றியிருந்த துணி துண்டு துண்டாக கிடந்தது.

படுக்கையறை முழுவதும் இரத்தம் படிந்திருந்தது. அதிர்ச்சியடைந்த பெண் பயந்து தனது குழந்தையைத் தேடிக் கொண்டிருந்தார். திடீரென்று அந்த விசுவாசமான நாயை கண்டாள் அது தன் சுவையான உணவை முடித்தது போல் இரத்தம் தோய்ந்த தன் வாயை நக்குவதைக் கண்டாள். நாய் தனது குழந்தையை சாப்பிட்டது என்று பெண் உறுதி செய்து செய்தால்.

யோசிக்காமல் தன் குழந்தையை ருசித்த நாயை கட்டையால் அடித்தாள் நாய் செத்து மடிந்தது. அதன் பின்னர் அவர் தனது குழந்தையின் உடலின் பாகங்களைத் தேடினாள். அப்போது கட்டிலின் கீழ் ஒரு மூலையில் குழந்தை படுத்துக் கொண்டு வேடிக்கை பார்த்தவாறு இருந்ததையும் அதன் மறு புறம் பாம்பு ஒன்று கிழிந்த நிலையில் கிடந்ததையும் அந்த பெண் கண்டார்.

அங்கு பாம்புக்கும், நாய்க்கும் கடும் சண்டை கொடூரமான பாம்பிடம் இருந்து குழந்தையை காப்பாற்ற நாய் போராடியதையும் அவள் அதை புரிய நேரமாகியது. ஏனென்றால் அவள் தனக்கு வந்த கோபத்தாலும், நிதானமற்ற தன்மையாலும் விசுவாசமான நாயைக் கொன்றாள். இனி அவள் கண்ணீர் விடுவதை அந்த விசுவாசமான நாய் அறியப் போவதில்லை.

அது போல் உண்மையை சரியா அறியாமல் எத்தனை முறை கடுமையான வார்த்தைகளால் மற்றவரை திட்டுகின்றனர். அவர்களைப் பற்றி பொய்களைப் பரப்புகின்றனர். வீண் பழி சுமத்தி அடுத்தவரிடம் காட்டிக் கொடுக்கின்றனர். சூழ்நிலையை அணுகுவதற்கு எப்பொழுதும் பொறுமையாக இருப்பதே சிறந்தது. நமக்கு விசாரிக்காத சில விடயங்களை அவசரப்பட்டு நம்புதல் கூடாது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *