தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை மீனா. இவர் முதன் முதலில் குழந்தை நட்ஷத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். மேலும் இவர் சினிமாவில் நடிகர் ரஜினிக்கு குழநதையாக நடித்து அதன் பின் அவருக்கே ஜோடியாக நடித்துள்ளார்.
ஆனால் இவர் தற்போது எந்த படத்திலும் நடிக்காமல் இருக்கிறார். நடிகை மீனா ரசிகர்கள் மத்தியில் கண்ணழகி என்ற பெயர் எடுத்த நடிகை ஆவார். இவர் இது நாள் வரை இளம் வயதில் எப்படி இருந்தாரோ அதே போல தான் நடிகை மீனா இருக்கிறார். சொல்ல போனால் நடிகை மீனாவிற்கு கண்கள் மிகவும் அழகாக இருக்கும்.
நடிகை மீனா சினிமாவில் நடிக்கும் போதே வித்யாசாகர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துக்கொண்டார். திருமணம் ஆகி இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். அவரும் சமீபத்தில் நடிகர் விஜய் நடித்த தெறி என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு மகளாக நடித்துள்ளார். நடிகை மீனாவின் கணவர் கடந்த 3 மதங்களுக்கு முன் உடல்நிலை குறைவு காரணமாக உ யிரி ழந் து விட்டார்.
ஆனால் நடிகை மீனா திருமணம் செய்து கொள்வதற்கு முன் பிரபல பாலிவுட் நடிகர் ஒருவரை உருகி உருகி காதலித்துள்ளார். அது வேற யாரும் கிடையாது ரசிகர்களுக்கு பிடித்த பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் தான். வித்யாசாகரை திருமணம் செய்வதற்கு முன் ரித்திக் ரோஷன்னிடம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாராம்.
ஆனால் நடிகை மீனா தன் காதலை ரித்திக் ரோஷனுக்கு கூறி திருமணம் செய்யலாம் என்று நினைக்கும் போது தான் ரித்திக் ரோஷனுக்கு கல்யாணம் என்ற செய்தியை கேட்டு தன்னுடைய இதயமே நின்று விட்டதாக ஒரு பேட்டியில் நடிகை மீனா பகிர்ந்துள்ளார். நடிகர் ரித்திக் ரோஷனை சந்தித்த போது அவரிடம் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நடிகை மீனா பகிர்ந்துள்ளார். இது தகவல் பல வருடங்களுக்கு பின் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது…