கணவரை வி வா கரத்து பெற்று டெஸ்ட் டியூப் மூலம் குழந்தை பெற்ற பிரபல முன்னணி நடிகை யாரென்று தெரியுமா ?? இதோ ..!! கேரளாவை பூர்வீகமாக கொண்டு ரேவதி மாடலிங் துறையில் நல்ல ஆர்வம் கொண்டவர். சிறுவயதிலேயே பரதநாட்டியம் போன்ற கலைகளை கற்க அந்த கலையின் மூலமாக நாயகி வாய்ப்பும் பெற்றார் ரேவதி.பாரதிராஜாவின் மண்வாசனை திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான ரேவதி முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியை பெற்றார்.
ஒரு கைதியின் டைரி, மௌன ராகம், மறுபடியும், அஞ்சலி போன்ற படங்கள் அவரை முன்னணி நாயகியாக உயர்த்தியது.அதன்பிறகு இயக்குனர் அவதாரம் எடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் பயணித்தார்.தான் நடித்த மருமகள் என்ற திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சுரேஷ் சந்திர மேனன் என்பவரை 1986ம் ஆண்டு
திருமணம் செய்துகொண்டார். பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2013ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.நடிகை ரேவதி 2018ம் ஆண்டு ஒரு நிகழ்ச்சியில் தனக்கு 5 வயதில் குழந்தை இருப்பதாகவும் அவருக்கு மஹி என பெயர் வைத்துள்ளதாகவும், டெஸ்ட் டியூப் குழந்தை என்றும் அறிவித்தார்.