திரையுலகில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் படையப்பா. இந்த படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் வி ல்லி யாக நடிகை ரம்யா கிருஷ்ணனின் நடிப்பு படத்தின் வெற்றிக்கு பக்க பலமாக இருந்தது.
மேலும் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்ற படையப்பா திரைப்படம் ரஜினியின் திரை வாழ்க்கையில் முக்கிய படமாக உள்ளது. மேலும் அதே போல் கே.எஸ் ரவிக்குமார்க்கும், ரஜினிகாந்துக்கும் இடையே நெருங்கிய நட்பு ஏற்பட இந்த படம் தான் காரணமாக அமைந்தது. படத்தின் வெற்றிக்குப் பிறகு இவர்கள் நெ ருங் கிய நண்பர்களாக மாறினர்.
மேலும் அதன் பிறகு கேஎஸ் ரவிக்குமார் ரஜினிகாந்தை வைத்து லிங்கா படத்தை இயக்கி இருந்தார். ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு பெறவில்லை. அதன் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து இன்னும் எந்த படத்திலும் பணியாற்றவில்லை.
ஆனால் படையப்பா படத்தில் என் பேரு படையப்பா இளவட்ட நடையப்பா என்ற பாடலில் இடம் பெற்ற ஹேமா பிந்து என்ற குழந்தை தான் தற்போது இதயத்தை திருடாதே சீரியலில் கதாநாயகியாக நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பாசமுள்ள குழந்தை அப்பா என்ற பாடலில் வரும் போது ஒரு சிறு குழந்தையின் முகம் படத்தில் இடம் பெறும்.
அதன் பிறகு தான் ரஜினிகாந்தின் முகம் வரும் தற்போது அந்த சின்ன குழந்தை பிரபல சீரியல் நடிகையாக வளர்ந்துள்ளார். தற்போது இந்த சீரியல் 1000 எபிசோடுகளை கடந்து மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வருகிறது.
மேலும் இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் ஹேமா பிந்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவரது சமூக வலைதளப் பக்கத்தில் இரண்டு லட்சத்திற்கும் மேலான ரசிகர்கள் அவரை பின் தொடர்ந்து வருகின்றனர்…