தமிழ் சினிமாவில் குடும்பத்தில் நடக்கும் கதையை மையப்படுத்தி பல படங்கள் வெளிவந்துள்ளன. அந்த வகையில் வெளியான திரைப்படம் தான் மாயாண்டி குடும்பத்தார். இந்த படத்தில் மணிவண்ணனின் இளைய மகனாக நடித்தவர் தான் நடிகர் தருண் கோபி.
இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை கணக்கியல் பட்டம் முடித்தார். படிப்பை முடித்தவுடன் திரைப்பட இயக்குனர்களான சக்தி சிதம்பரம் மற்றும் உபேந்திரா ஆகியோர்களிடம் உதவி இயக்குனராக பயிற்சி பெற்றார்.
விஷால் நடித்த தி மி ரு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் தருண் கோபி. இந்த படம் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் வி ல் லி யா க ஸ்ரீயா ரெட்டியை நடிக்க வைக்க ஆர்வமாக இருந்த தருண் கோபி பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் ஓகே செய்தார்.
அதன் பின்னர் தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறையவே திருமணத்தை முடித்துக்கொண்டார் தருண் கோபி. இவரது மனைவி ஈழத்தை சேர்ந்த ஜானு லிங்கேஸ்வரி ஆவார். இவர் தற்போது மதுரை ஜெய்கிந்த் புறத்தில் வசித்து வருகிறார்…