நடிகை மகாலட்சுமி ரவீந்தரின் வீட்டில் நடந்த விஷேசம் என்னவென்று தெரியுமா ?? இதோ வெளியான அழகிய புகைப்படம் ..!!
சின்னத்திரை நாயகியான மகாலட்சுமி ரவீந்தரின் தாலி சரடில் கோர்க்கும் நிகழ்வில் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது ஊடகங்களில் வைரலாகி வருகிறது.கடந்த செப்டம்பர் 1-ம் திகதி சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்துக் கொண்டார் லிப்ரா புரொடக்ஷன் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன்.
இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் என்பதாலும், ரவீந்தரின் உடல் எடையை வைத்தும் ரசிகர்கள் இருவரையும் வைரலாக்கி வருகின்றனர்.மகாலட்சுமிக்கு அனில் என்பவருடன் திருமணம் நடந்த நிலையில், சச்சின் என்ற ஒரு மகனும் இருக்கின்றார். தற்போது ரவீந்தர் தயாரித்து வரும் விடியும் வரை காத்திரு என்ற படத்தில் நடித்து வருகிறார் மகாலட்சுமி.
இதனை தொடர்ந்த இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாகவும் தகவல் வெளியாகியது. ஆனால் இதுகுறித்து ரவீந்தர் தரப்பு எந்தவொரு உறுதியும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் மகாலட்சுமி இனிமேல் நடிப்பிலிருந்து விலகுவதாகவும் மாறாக கணவர் திரைப்படம் தயாரிக்கும் பணியில் இருந்து வரும் நிலையில், மகாலட்சுமி சீரியல் தயாரிக்கும்
பணியில் இறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனை தொடர்ந்து இருவருக்கும் மகாலக்ஷ்மியின் மஞ்சள் கயிற்றை மாற்றி தாலி சரடில் கோர்க்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.இந்நிகழ்வில் இருவரும் மாலையும் கழுத்துமாக உள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு இருவருக்கும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.