கீர்த்தி சுரேஷ் ஒரு இந்திய நடிகை ஆவார், அவர் முக்கியமாக தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் தோன்றுகிறார். தெலுங்கில் மகாநதி படத்தில் நடிகை சாவித்திரியாக நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார்.
கீர்த்தி சுரேஷ் 1992, அக்டோபர் 17 ஆம் நாளில் சுரேஷ்குமார், மேனகா ஆகியோருக்கு சென்னையில் பிறந்தார். கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார்.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு சம்மதித்துவிட்டார் எனவும், விரைவில் பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்ய இருக்கிறார் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
மாப்பிள்ளை ஒரு தொழிலதிபர் என்றும், அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார் எனவும் கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையாக இருந்தால் விரைவில் திருமணம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கலாம்.