என்னாது.. பொன்னியின் செல்வன் படத்தில் வந்த காட்சிகள் எங்கு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரியுமா ?? இதோ லீக்கான ருசிகர தகவலை நீங்களே பாருங்க ..!!
பொன்னியின் செல்வன், கல்கி எழுதிய புகழ் பெற்ற வரலாற்றில் உள்ள பல உண்மை கதாபாத்திரங்களையும் சில கற்பனை கதாபாத்திரங்களையும் வைத்து கற்பனையாக உருவாக்கிய தமிழ் புதினமாகும். 1950 – 1955-ஆம் ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது.
கி.பி. 1000-ஆம் ஆண்டு வாக்கில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது. பொன்னியின் செல்வன், பல்வேறு நாடகக் குழுக்களால் நாடகமாகவும் அரங்கேற்றப்பட்டுள்ளது.
‘பொன்னியின் செல்வன்’ கதையை எவ்வளவு நேர்த்தியாக ரசிகர்கள் கண்களுக்கு காட்சிப்படுத்த முடியுமோ, அதனை மிக சிறப்பாக செய்துள்ளார் மணிரத்னம்.குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கதாபாத்திரமுமே கதைக்கு பொருந்தி, அளவான நடிப்பால் அரச வைத்துள்ளனர்.
இப்படி பல பாசிட்டிவாக விமர்சனங்கள் இந்த படத்திற்கு வந்து கொண்டிருக்கும் நிலையில் படத்தில் இலங்கை தொடர்பான காட்சிகள் எங்கு படமாக்கப்பட்டது என்ற ருசிகரமான தகவல் வெளியாகியுள்ளது.பொன்னியின் செல்வன் படத்தில் இலங்கையில் எடுக்கப்பட்ட காட்சிகளாக வரும் காட்சிகள்
எல்லாம் தாய்லாந்தில் படமாக்கப்பட்டுள்ளன.யானை மீது ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லக்ஷ்மி சவாரி செய்யும் காட்சி, ஐஸ்வர்யா ராய் யானையில் வந்து பொன்னியின் செல்வனை காப்பாற்றும் காட்சி உள்ளிடவைகள் தாய்லாந்தில் தான் எடுக்கப்பட்டுள்ளது.