8 வருடங்களுக்கு பின் கர்ப்பமான ஸ்ரீஜா !! இதோ இணையத்தில் வெளியான வளைகாப்பு புகைப்படத்தை பார்த்து வியந்து போன ரசிகர்கள் ..!!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து நிகழ்ச்சிக்குமே மிகப்பெரிய ரசிகர் பட்டாளங்கள் இருக்கிறது. அந்த தொடரில் நடித்த இருவர் நிஜ வாழ்வில் ஜோடியாகிவிட்டால் அவர்களுக்கு ரசிகர் பட்டாளம் பன்மடங்காக மாறிவிடுகிறது. அந்த வகையில் ஒன்றாக நடித்து பின்பு ரியல் வாழ்க்கையில் ஜோடி
ஆனவர்கள் தான் மிர்ச்சி செந்தில் மற்றும் ஸ்ரீஜா. இவர்கள் இருவரும் மக்கள் மனங்களில் நீங்காத இடம் பிடித்த சரவணன் மீனாட்சி தொடரில் நடித்தனர்.இந்நிலையில் திருமணமாகி 8 வருடங்களுக்கு பிறகு ஸ்ரீஜா கர்ப்பம் ஆகி இருக்கிறார்.
இன்று ஸ்ரீஜாவின் வளைகாப்பு விழா நடைபெற்று இருக்கிறது.அதன் போட்டோக்களை செந்தில் இன்ஸ்டாகிராமில் மகிழ்ச்சியாக பகிர்ந்து இருக்கிறார். அவர்களுக்கு தற்போது ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.