காதலிக்க நேரமில்லை சீரியல் நடிகையா இவங்க !!! அட ஆள் அடையாளம் கூட தெரியலையே .. இதோ வெளியான புகைப்படம் ..!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காதலிக்க நேரமில்லை என்ற தொடர் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் நடிகை சந்திரா லக்ஷ்மன். இவர் தமிழில் ஸ்ரீகாந்த் நடிப்பில் மனசெல்லாம் படத்தில் ஸ்ரீகாந்திற்கு தங்கையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் தமிழில் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வந்தார்.
திரைப்படங்களை விட இவருக்கு மிகவும் பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது தொலைக்காட்சி தொடர்கள் தான். சினிமாவில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்காததால் தனது பயணத்தை தொலைக்காட்சி சீரியல் பக்கம் தொடர்ந்தார். இதுவரை தமிழில் கோலங்கள், காதலிக்க நேரமில்லை, துளசி பாசமலர் போன்ற பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார்.
மேலும் மலையாளத்திலும் பல தொடர்களில் நடித்துள்ளார் சந்திரிகா. இறுதியாக தமிழில் தில்லாலங்கடி திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார். தற்போது மலையாளத்தில் ஒளிப்பரப்பாகி வரும் ‘ஒன்னும் ஒன்னும் மூனு’ என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்து வருகிறார்
இவரது திருமணத்திற்கும் பலரும் வாழ்த்துக்கள் கூறினர். தற்பொழுது சந்திரா லட்சுமணன் கர்ப்பமாக இருக்கிறார் . அண்மையில் இவர் போட்டோ ஷூட் நடத்தி அதில் இணையத்தில் பகிர்ந்துள்ளார்.