அட எமி ஜாக்சன் மகளா இது ?? அடேங்கப்பா அழகில் அம்மாவை மிஞ்சிடுவாங்க போலயே .. இதோ எப்படி உள்ளார் என்று நீங்களே பாருங்க ..!!
தமிழ் சினிமாவில் கடந்த 2010 ஆர்யா நடிப்பில் வெளியான மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தவர் நடிகை எமி ஜாக்சன். அதன் பிறகு தாண்டவம்,தங்க மகன் மற்றும் விஜய் நடிப்பில் வெளியான தெறி உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.இவர் இறுதியாக ரஜினியின் நடிப்பில் வெளியான 2.0 திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அதில் தனது நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். பின்னர் பட வாய்ப்புகள் எதுவும் அவ்வளவு அதிகமாக கிடைக்காததால் தான் காதலித்த தொழிலதிபர் ஜார்ஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.பின்னர் இரண்டு வருடங்கள் கழித்து அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் பெயர் ஆண்டனி ஜாக்சன் பனையிட்டூ.
இதனிடையே ஜார்ஜ் மற்றும் எமி ஜாக்சன் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுள்ளதாக இணையத்தில் தகவல் வெளியானது.இதனைத் தொடர்ந்து அவ்வப்போது எமி ஜாக்சன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். அவ்வகையில் தற்போது தனது செல்ல மகனுடன் வண்ணத்துப்பூச்சியை கொஞ்சி மகிழும் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.
செல்ல மகளுடன் எமி❤️#AmyJackson pic.twitter.com/oIVnQH1sHZ
— CMurugadoss (@RCMurugadoss) August 2, 2022