அடடே இவங்க தான் ஜி பி முத்துவின் மனைவி & பிள்ளைகளா .. இவருக்கு இவ்வளவு அழகான மனைவி மகள்களா ?? இதோ ..!!!
இணையத்தில் மிகவும் பிரபலமான ஒரு நபராக இருந்து வரும் ஜிபி முத்து தற்போது விஜய் டிவியின் பிக் பாஸ் 6ம் சீசனுக்கு போட்டியாளராக வந்திருக்கிறார்.அவரது பயந்த சுபாவத்தை வைத்து கமல்ஹாசனே நேற்று அவரை கலாய்த்து இருந்தார். ஜிபி முத்து BB வீட்டுக்குள் செல்லும் முன்பு குடும்பத்தினருக்காக கண்ணீர் விட்டார். இதுவரை ஒருநாள் கூட குடும்பத்தை விட்டு பிரிந்தது இல்லை என கூறி இருந்தார் அவர்.
டிக் டாக் பிரபலமான ஜி பி முத்து தற்பொழுது நடைபெற்று வரும் பிக் பாஸ் சீசன் 6 வீட்டிற்குள் முதல் போட்டியாளராக நுழைந்தார். முதல் போட்டியாளராக நுழைந்த அவர் பயத்தினால் பட்ட பாடு காண்போரை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. ‘வீட்டிற்குள் எனக்கு தனியாக இருக்க பயமாய் இருக்கிறது. யாரையாவது துணைக்கு அனுப்புங்கள்’ என்று கூறிக் கொண்டே இருந்தார்.
பிக் பாஸ் சீசன் 6 ல் பங்கு பெற மேடை ஏறிய அவர், எப்படி யூடியூப் சேனல் ஆரம்பித்து அதன் மூலம் பிரபலமானார் என்பதை பற்றியும், அவருடைய குடும்ப கஷ்டத்தை பற்றியும் எதார்த்தமாக கூறினார். இவருக்கென்றே பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் ஏராளம். இனிவரும் நாட்களில் கூட இவர் தனது எதார்த்தமான பேச்சினால் கண்டிப்பாக அனைவரையும் சிரிக்க வைப்பார்.
இனி வரும் நாட்களில் கூட ஜி.பி. முத்துவிடம் இருந்து அதிக நகைச்சுவைகளை நாம் எதிர்பார்க்கலாம்.
இந்நிலையில், ரசிகர்களை சிரிக்க வைத்து வரும் ஜி.பி. முத்துவின் மனைவி மற்றும் நான்கு பிள்ளைகளின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.நேற்று நடந்த பிக் பாஸ் துவக்க நிகழ்ச்சியில் கூட ஜி.பி. முத்துவின் குடும்பம் வந்திருந்தார்கள். இதோ இணையத்தில் வெளியான அழகிய புகைப்படம் ..