பிரபல தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிதான் பிக் பாஸ். தற்போது பிக் பாஸ் சீசன் 6 தொடங்கி ஒருவாரம் ஆகிறது. இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரையை சேர்ந்த பிரபலங்களும், சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருந்து வந்தவர்களும் போட்டியாளர்களாக கலந்து கொண்டுள்ளனர். இதனால் இந்த நிகழ்ச்சி சுவாரஸ்யமாக சென்றுகொண்டிருக்கிறது.
இந்த பிக் பாஸ் சீசன் 6 ல் ஒன்பது ஆண் போட்டியாளர்களும், 10 பெண் போட்டியாளர்கள், ஒரு திருநங்கை என மொத்தமாக 20 நபர்களை பிக் பாஸ் வீட்டுக்குள் சேர்த்திருக்கிறார்கள். முதல் நாளில் இருந்தே போட்டியாளர்களுக்கு பல டாஸ்குகளை கொடுத்து வருகிறது பிக் பாஸ் நிகழ்ச்சி. அதோடு மட்டும் நில்லாமல் முதல் நாளில் இருந்தே போட்டியாளர்களுக்கு இடையே சண்டையும் துவங்கிவிட்டது.
குறிப்பாக சொல்லப்போனால் ஆரம்ப நாளில் சந்தோசமாக இருந்த ஜி.பி.முத்து அடுத்தடுத்த நாட்களில் சில சண்டைகளால் மனமுடைந்து அழ தொடங்கிவிட்டார். இந்நிலையில் இலங்கை மீடியாவில் பணியாற்றிவந்த ஜனனி என்ற போட்டியாளரை ஆரம்ப நாளில் இருந்தே போட்டியாளர்கள் தங்கி வருவதாக சொல்லப்படுகிறது.
தற்போது ஜனனி புடவையில் அழகாக எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் இணையத்தில் உலா வருகின்றன இதனை பார்த்த நெட்டிசென்கள் சில குட்டி திரிஷா மாறி இருக்காங்களே. அப்போ இந்த சீசனுக்கு ஜனனி ஆர்மி ஆரம்பிச்சுர வேண்டியதான் என குசும்பாக கமெண்டுகளை பதிவிட தொடங்கி விட்டனர்.