ம றைந்த பாடகர் மலேசியா வாசுதேவனின் மகன் இந்த பிரபல நடிகரா ?? இதோ யாரென்று நீங்களே பாருங்க ..!! பிரபல முன்னணி நடிகர் மலேசியா வாசுதேவன் ஒரு தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகரும் நடிகரும் ஆவார். இவர் 8000 இற்கும் அதிகமான தமிழ்த் திரைப்பாடல்களைப் பாடியவர். மலேசியாவில் தமிழர் இசைக் குழு ஒன்றில் முக்கிய பாடகராக விளங்கினார்.1970களில் விளம்பர நிறுவனங்களுக்காக 45 ஆவணப் படங்களில் நடித்துள்ளார்.
இளையராஜாவின் “பாவலர் பிரதர்ஸ்” குழுவில் பல மேடைக் கச்சேரிகளில் பாடி வந்தார்.மலேசியா வாசுதேவன் அன்னப்பூரணி உஷா வாசுதேவன் ௭ன்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு யுகேந்திரன், பிரசாந்தினி மற்றும் பவித்ரா என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவருடைய மகன் தமிழ்த் திரைப் படங்களிலும் மற்ற மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் ஒரு கைதியின் டைரி படத்தில் வில்லனாக நடித்தார். அதன் பின்னர் பல படங்களில் நடிக்கவும் தொடங்கினார். இவர் 85 தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். முதல் வசந்தம், ஊர்க்காவலன், ஜல்லிக்கட்டு என வெற்றிப் படங்கள் பலவற்றில் வில்லனாகவும் குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார்.
மலேசியா வாசுதேவன் அவர்களின் மகன் யுகேந்திரன் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் எப்போதும் தனது குடும்பத்துடன் எடுக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
View this post on Instagram