பிரபல நடிகை ஹன்சிகா ஒரு இந்திய நடிகை ஆவார், அவர் முக்கியமாக தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் தோன்றுகிறார். ஹன்சிகா இந்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், பின்னர் தேசமுதுரு, காந்த்ரி மற்றும் மஸ்கா உள்ளிட்ட தெலுங்கு
படங்களில் முக்கிய வேடங்களில் தோன்றினார்.தனுஷ் நடித்த மாப்பிள்ளை எனும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. ஆனால் இதற்கு முன்பு ஹிந்தியில் சில படங்களில் நடித்துள்ளார்.இதன்பின் தமிழ், தெலுங்கு என ஆகிய இரு
மொழிகளிலும் நடிக்க துவங்கினார். ஆனால் சில வருடங்கள் முன்பு நடிப்பதில் இருந்து விலகி இருந்தார்.மேலும் தற்போது சிம்புவடன் மஹா, பார்ட்னர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.ஆனால் இவருக்கு முன்பு இருந்தது போல் தமிழ் திரையுலகில் வரவேற்பு மக்கள் மத்தியில் இல்லை என்று தான் கூறவேண்டும்.
இந்நிலையில், நடிகை ஹன்சிகா விரைவில் திருமணம் செய்துகொள்ள போகிறாராம். பிரபல அரசியல்வாதியின் மகனை தான், நடிகை ஹன்சிகா திருமணம்செய்துகொள்ள போவதாக திரை வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. ஆனால், மாப்பிள்ளையின் பெயர் இதுவரை வெளிவரவில்லை.
விரைவில் நிச்சயதார்த்தம் நடைபெற போவதாகவும் தகவல் கூறுகின்றனர் ஆனால், இதுகுறித்து ஹன்சிகா இதுவரை எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.