சாவித்திரி கணேஷ் புகழ் பெற்ற ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகை, திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் 318 படங்களில் நடித்திருக்கிறார்.சிஸ்டா பூர்ணையா சாத்திரிகளிடம் இசை மற்றும் நடனம் பயின்றார்.
இளம் வயதிலேயே மேடைகளில் தோன்றி நடித்தார். 1952-ஆம் ஆண்டு இவர் நடிகர் செமினி கணேசனை மணந்தார்.19 மாதங்கள் கோமா என்னும் ஆழ்மயக்க நிலையில் இருந்த சாவித்திரி 1981 திசம்பர் 26-ஆம் நாள் இறந்தார். அப்போது அவருக்கு வயது 45.
அதேபோல் சாமுண்டீஸ்வரியின் தம்பி சதீஷ் குழந்தையாக அம்மாவின் மடியில் இருந்த படி அப்பா கொஞ்சுவது போல் இருக்கும் புகைப்படமும் அதில் இடம்பெற்றுள்ளது.இப்படி பல்வேறு சுவாரஸ்யம் நிறைந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு தனது பெற்றோரின் ஞாபகத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார் சாவித்திரியின் மகள் விஜய சாமுண்டீஸ்வரி.