ராஜா ராணி சீரியல் நடிகர் சித்துவின் மனைவி யார் தெரியுமா ?? அட அவங்களும் ஒரு பிரபல சீரியல் நடிகை தானா .. இதோ ..!! ராஜா ராணி என்ற சீரியலில் முதலில் ஜோடியாக நடித்தது சஞ்சீவ், ஆல்யா மானசா. சீரியல் மூலம் இருவருக்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டு காதலர்கள் ஆனார்கள். பின் திருமணமும் செய்தார்கள், இப்போது அவர்களுக்கு ஐலா என்ற பெண் குழந்தையும் உள்ளது.
திருமணம் சீரியல் மூலம் மக்களின் மனம் கவர்ந்த ரீல் ஜோடிகள் காதலித்து வந்த நிலையில், ரியல் ஜோடிகளாக மாறி உள்ளனர். ராஜா ராணி 2 சீரியலில் ஹீரோவாக நடித்து வரும் சித்துவுக்கு ஏகப்பட்ட ரசிகைகள் உள்ளனர்.
சின்னத்திரை நடிகர்களான சித்து சித் மற்றும் ஸ்ரேயா ஆஞ்சன் திருமணம் சென்னையில் உள்ள தனியார் மஹாலில் கோலாகலமாக நடைபெற்றது. குடும்ப உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.