பிக் பாஸ் சீசன் 3 மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை லாஸ்லியா. இதற்கும் முன் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்த வந்தார்.பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர், தொடர்ந்து பல படங்களில் கதாநாயகியாக நடிக்க கமிட்டானார். அறிமுகம படமாக நடிகர் அர்ஜூனுடன் இணைந்து Friendship எனும் படத்தில் நடித்திருந்தார்.
இதனை தொடர்ந்து தற்போது கூகுள் குட்டப்பா படத்தில் நடித்துள்ளார். இதுதவிர்த்து மேலும் பல பிரபலங்களுடன் இணைந்து படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார் லாஸ்லியா.தற்போது லொஸ்லியா வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சமீப நாட்களாக தனது வலைத்தள பக்கத்தில் அதிகமான புகைப்படங்களை பதிவிட்டு வரும் லொஸ்லியா தற்போதும் வெளியிட்டுள்ளார். பொதுவாக லொஸ்லியாவின் அழகில் மயங்காத ரசிகர்களே கிடையாது. தற்போதும் லொஸ்லியா வெளியிட்டுள்ள புகைப்படத்தில் கொள்ளை அழகுடன் காணப்படுகின்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது உள்ளே வந்த அவரது தங்கை தற்போது அடையாளம் தெரியாத அளவிற்கு வளர்ந்ததுடன், உடல் எடையும் கூடி தனது அக்காவுடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.