நடிகை ராதா ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் சில மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி படங்களில் கூடுதலாக தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார் மற்றும் தோன்றியுள்ளார். சுமார் ஒரு தசாப்த காலம் திரைப்படத் துறையில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்தார்.
கடந்த 1980, 90களில் தமிழ்த் திரையுலக ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருந்தவர் ராதா.சிவாஜி, ரஜினி, கமல், விஜய காந்த், சத்யராஜ், பிரபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்து பல வெற்றிப் படங்களையும் கொடுத்தவர்.
1981 முதல் 1991 வரையிலான ஆண்டுகளில் இவர் ஒரு புகழ்பெற்ற முக்கிய நடிகை இருந்தார். இவரது சகோதரி நடிகை அம்பிகாவும் இதே காலகட்டத்தில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தார். இவர்கள் இருவரும் இணைந்து எண்பதுகளில் பல தென்னிந்தியத் திரைப்படங்களில் நடித்துள்ளனர்,ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ’ஜோடி நம்பர் ஒன்’ நடன நிகழ்ச்சியின் 6 & 7 ஆவது
பகுதிகளில் நடுவராகப் பொறுப்பாற்றியதன் மூலம் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.இவர் 1991 இல் பிரபல தொழிலதிபரான ராஜசேகரன் நாயரை திருமணம் செய்துகொண்டு மும்பையில் குடியேறி உள்ளார். இவர்களுக்கு விக்னேஷ் நாயர் என்ற மகனும், கார்த்திகா நாயர் மற்றும் துளசி நாயர் என இரண்டு மகள்களும் உள்ளனர்.
இவரது மூத்த மகளான கார்த்திகா நாயர், ஜோஷ் என்ற தெலுங்கு படத்தின் மூலமாக திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். இவரது இளைய மகளான துளசி நாயர் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய கடல் திரைப்படத்தின் மூலமாக நடிக்கத் தொடங்கியுள்ளார்.
நடிகை ராதா கணவர் அவர்களின் பிறந்தநாள் அன்று அவர்கள் செய்யும் சின்ன சின்ன அழகான சேட்டைகள்
. அதில் அவர் பிறந்தநாள் கேக்-கில் அடித்து மகிழ்ந்த வீடியோ தான். இதோ அந்த அழகான வீடியோவை நீங்களே பாருங்க ..