நவம்பர் 4 ஆம் தேதி வெளியான ல வ் டு டே படம் நல்ல விமர்சனங்களை பெற்று, வசூலிலும் பட்டையை கி ள ப் பி வருகிறது.இந்த படத்தை கோ மா ளி பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கியிருந்தார். இவருக்கு இது இரெண்டாவது படமாகும்.மேலும் இந்த படத்தில் அவரே கதாநாயகனாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக ந டிகை இவானா நடித்திருந்தார்.
மேலும் ராதிகா, சத்யராஜ், யோகி பாபு, ரவீனா உள்ளிட்ட திரை நட்சத்திரங்களும் படத்தில் நடித்திருந்தார்கள். இந்தப்படத்தை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். மேலும் திரைநட்சத்திரங்கள் பலரும் இந்த படத்தை பாராட்டி கருத்துக்களை தெரிவித்து வருகிறாரகள். அண்மையில் கூட நடிகர் ரஜினிகாந்த் படத்தின் இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
இந்நிலையில் ல வ் டு டே படத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்து மனைவி மற்றும் மகன் உதயநிதி ஸ்டாலினுடன் பார்த்துள்ளனர். படத்தை பார்த்து விட்டு ஸ்டாலின் உதநிதியிடம் படம் நல்லாருக்கு என கூறியுள்ளார். இந்த நிகழ்வை பேட்டி ஒன்றில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
அதாவது அப்பா படம் பார்த்து வெளியே வந்ததும் நல்லாருக்கு உதயா என கூறினார். இதில் அம்மா கூறியதுதான் கா மெ டி யா க இருந்தது. படத்தை பார்த்து அதில் வருவது போல நாமும் போனை மாற்றிக்கொள்ளலாமா என முதல்வர் ஸ்டாலினிடம் கேட்டுள்ளாராம் மனைவி துர்கா ஸ்டாலின். இதை கேட்டதும் நானும் அப்பாவும் வேண்டவே வேண்டாம் என கூறியதாக தெரிவித்திருந்தார்.