திரைப்படங்களில் தற்போது பல புதுமுக நடிகைகள் நடித்து வந்தாலும் 90-களின் காலகட்டத்தில் நடித்து வந்த நடிகைகளை யாராலும் மறந்திருக்க முடியாது. அந்த வகையில் பிரபல இயக்குனரான சேரன் இயக்கி நடித்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ஆட்டோக்ராப்.
இந்த படத்தில் சேரனுக்கு ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றவர் கோபிகா.கேரளா மாநிலத்தை பூர்விகமாக கொண்ட இவர் இந்த படத்திலும் கேரள பெண்ணாகவே நடித்து இருப்பார்.இருப்பினும் இவருக்கு மக்கள் மத்தியில் மற்றும் சினிமா வட்டாரத்தில் பிரபலத்தை ஏற்படுத்தியது ஆட்டோக்ராப் படம் தான்.
கனா கண்டேன், பொன்னியின் செல்வன், தொட்டி ஜெயா, எம்டன் மகன் வீராப்பு போன்ற பல வெற்றி படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவ்வாறு தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.இந்நிலையில் 2008-ம் ஆண்டு நார்தன் அயர்லன்ட் சேர்ந்த மருத்துவரான அஜிலேஷ் சாக்கோ என்பவபரை
திருமணம் செய்து ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆகிவிட்டார். திருமணத்திற்கு பிறகு நடிப்பதை முற்றிலும் தவிர்த்துவிட்டார்.மேலும் இவருக்கு அமி, ஐடேன் எனும் இரு குழந்தைகள் உள்ளார்கள். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவர் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைராலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் நம்ம கோபிகாவா இது என வாயடைத்து போயுள்ளனர்.