நடிகர் எஸ்.ஜே. சூர்யா ஒரு இந்திய திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் ஆவார், இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படத் துறைகளில் பணியாற்றியுள்ளார்.
அவர் நடிகராக விரும்பினார், ஆனால் வசந்த் மற்றும் சபாபதிக்கு உதவியாக இயக்கத் தொடங்கினார்.சூர்யாவின் முதல் திரைப்படம் வாலி பெரும் வெற்றிகண்டது. அடுத்து வந்த குஷி, தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் பெரும் வெற்றியடைந்தபோதும் இந்தியில் எடுக்கப்பட்ட மறுபதிப்பு வெற்றி பெறவில்லை.
எஸ். ஜே. சூர்யா என்ற திரைப்பெயர் கொண்ட எஸ். ஜஸ்டின் செல்வராஜ் ஓர் இந்திய திரைப்பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர். தமிழ், திரைப்படத்துறையான கோலிவுட்டில் புகழ்பெற்ற இயக்குனரும் ஆவார்.
பல படங்களில் தற்போது பிஸியாக நடித்து வரும் இவருக்கு, எஸ்.ஜே சூர்யாவிற்கு இந்த வருடத்திற்குள் திருமணம் செய்து வைக்க அவரது உறவினர்கள் முடிவு செய்து தீவிரமாக பெண் தேடி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
54 வயதில் திருமணம் செய்யப்போகிறாரா என நெட்டிசன்கள் கேள்வியை எழுப்பினாலும், விரைவில் எஸ்ஜே சூர்யாவுக்கு திருமணம் நடக்கும்.அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.