பிரபல முன்னணி நடிகரான சரத்குமார் ராமநாதன் ஒரு இந்திய நடிகர், அரசியல்வாதி, திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் பாடகர் ஆவார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். முதலில் பாடிபில்டர் மற்றும் பின்னர் பத்திரிகையாளர், 1986 இல், சரத்குமார் தெலுங்கு
திரைப்படமான சமாஜம்லோ ஸ்திரீயில் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்.முன்னாள் தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் சங்க தலைவர். தமிழ் திரைப்பட உலகில் புகும்போது எதிர்மறை வேடங்களில் நடித்து வந்தவர், சூரியன் படத்தில் முதன்மை வேடத்தில் நடித்து சிறப்பு கவனம் பெற்றார்.
சரத்குமார், திரைத்துறைக்கு வருவதற்கு முன்னரே சாயாதேவி என்பவரைக் காதலித்து,மணம் புரிந்தார். இவர்களுக்கு வரலட்சுமி, பூஜா என்னும் இரு மகள்கள் உள்ளனர். சரத்குமாருக்கு நடிகை நக்மாவுடன் ஏற்பட்ட காதலால், சரத்குமார் – சாயாதேவி திருமண வாழ்க்கை முறிந்தது
அப்பொழுது ராடன் நிறுவனத்தின் உரிமையாளரும் நடிகையுமான ராதிகாவுடன் சரத்குமாருக்கு காதல் மலர்ந்தது. இருவரும் 2001 ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டனர். இருவருக்கும் இராகுல் என்ற மகன் 2004 இல் பிறந்தார்
எம். இராமநாதன் மற்றும் புசுபலீலா தம்பதியினருக்கு மகனாக புதுதில்லியில் 1954சூலை 14 அன்று பிறந்தார்.இவரது சகோதரி மல்லிகா குமார்.இந்நிலையில், நடிகர் சரத்குமார் தந்தை ராமநாதனின் புகைப்படம் வெளியாகியுள்ளது. தனது தந்தையின் புகைப்படம் நடிகர் சரத்குமார் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இதோ சமூக இணையத்தில் வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..